தினம் ஒரு மூலிகை:
ஆவாரம்பூ:
----------------------
----------------------
2. தாவரப்பெயர் -: CACSIA AURICULTA.
3. தாவரக்குடும்பம் -: CAESALPINIACEAE.
4. பயன்தரும் பாகங்கள் -:
இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் ஆகிய அனைத்தும் மருத்துவப் பயனுடையவை.
5. வளரியல்பு -:
ஆவாரை தமிழகமெங்கும் அனைத்துவகை நிலங்களும் ஏற்றவை. எல்லா இடங்களிலும் தானே வளர்கிறது. வியாபார நோக்குடனும் பயிரிடுகிறார்கள்.
பழிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையுடைய அழகிய குறுஞ்செடி, மெல்லிய தட்டையான காய்களையுடையது. இதன் பட்டைத் தோல் பதனிடப் பயன் படுகிறது. இது ஒரு வருடப் பயிர். வேர் எடுக்காவிட்டால் ஆண்டுக்கணக்கில் உயிருடன் இருக்கும். ஆவரஞ்செடி பயிரிட முதலில் நிலத்தை நன்றாக உழுது உரமிட்டு நீள் பாத்திகள் அமைக்க வேண்டும்.
ஆவாரை விதைகளை நேரடி விதைப் பெனில் 15 கிலோவும், நாற்றங்கால் என்றால் 7.5 கிலோவும் தேவைப்படும். 45 நாட்கள் வயதுடைய நாற்றை நீள் பாத்திகளில் 1.5 அடிக்கு 1.5 அடி இடைவெளியில் நட வேண்டும். பயிர் தண்ணீருக்குப் பின் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாயச்ச வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இலைகளைப் பறிக்கலாம். ஒரு வருடத்தில் 2000 கிலோ இலைகள், 250 கிலோ பூக்கள், மற்றும் 500 கிலோ காய்கள் கிடைக்கும். பதப் படுத்த நிழலில் 5 நாட்கள் உலரவைக்க வேண்டும் இலைப்புள்ளி, இலைச்சுருட்டு நோய்கள் வராமல் இருக்க மருந்துக் கொல்லியைப் பயன் படுத்த வேண்டும். செலவு ஒரு வருடத்திற்கு ரூபாய் 12,000 வரவு ஒருவருடத்திற்கு 60,000 ஆக வருமானம் ரூ.48,000 இவை தோராயமானவை.
6. மருத்துவப் பயன்கள் -:
ஆவாரை சதை, நரம்பு, ஆகியவற்றை சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயல் படும். சர்கறை நோய்க்கு நல்ல மருந்து. உடம்பின் சரும துர் வாடையைப் போக்குவதுடன் நிறமூட்டும்.
சீயக்காய் போன்று சிகையிலுள்ள அழுக்கைப் போக்கிவிடும்.
மந்தமான கண் தெளிவடையும் .
மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் .
ஆவாரம் பூவின் இதழ்களை ஆய்ந்து எடுத்து பச்சைப் பருப்பு , துவரம் பருப்பு சேர்த்து சமைத்து தொடர்ந்து 40 நாள் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர உடலில் நல்ல பலம் பெறும்.
உடல் சூட்டை ஆவாரம் பூ தணிக்கக் கூடியது .
பூவுடன் பாசிப்பயிறு சேர்த்து அரைத்து
உடம்பிற்குத் தேய்த்துக் குளிக்கலாம் .
உடம்பிற்குத் தேய்த்துக் குளிக்கலாம் .
உடலிலுள்ள அரிப்பு நீங்க நன் மருந்து . ஆவாரைக்கு ‘ தங்க மங்கை ’ என்ற சிறப்புப் பெயருண்டு . இதில் தங்க பஸ்பம் செய்வார்கள் .
வைத்தியத் துறையில் இதன் எல்லா பாகங்களும் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
உடலிலுள்ள துர்நீரை இறக்கி சிறு நீராக சுரக்கச் செய்து நீரை வெளியேற்றுகிறது .
நரம்பு தளர்ச்சியை நீக்கி, வலிமையைக் கொடுக்கிறது .
ஆவாரம்பூவை நெய்யில் வதக்கி உட்கொண்டு வர உடலில் மறைந்திருக்கும் பல வியாதிகள் அகன்று விடும்.
பூவை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வெள்ளை , வெட்டை, மேக நோய்கள் , சோர்வு , நாவறட்சி, உடல் வறட்சி நீங்கும் .
ஆவாரம் பூவுடன் நாவல் மர இலையை சேர்த்துப் பொடியாக்கி பசும்பாலில் கலக்கிக் குடித்துவர சர்க்கரை வியாதி விலகி விடும். நாவல் இலைக்குப் பதில் வில்வ இலையையும் சேர்க்கலாம் .
ஆவாரம் பூவுக்கு உடலைப் பொலிவுடன் அமைக்கும் சக்தி உண்டு .
விருப்பம் போல பக்குவம் செய்து, இதனை உணவோடு சேர்த்துக் கொண்டால் உடலில் நல்ல தளதளப்பும் , சாந்தியும் ஏற்படும் .
பூவுடன் பச்சைப் பயிறு சேர்த்தரைத்து நமைச்சலுக்குத் தேய்த்துக் குளிக்கலாம் .
இலைகள் குளிர்ச்சியுடையது . வெயிலில் வெகு தூரம் நடப்பவர்கள் , இந்த இலையை தலையின் மீது பரப்பி அதன்மீது தலைப்பாகை கட்டி நடப்பார்கள் . வெயிலின் வெப்பம் பாதிக்காது . நடையும் சுறுசுறுப்புடன் தோன்றும் .
ஆவாரைப் பிசின் நிரிழிவு , வெள்ளைப்படுதல் முதலிய சிறுநீர் கேடுகளைப் போக்கும் .
பூவைச் சமைத்துச் சாப்பிட, கற்றாழை மணம் , நீரிழிவு , நீர் வேட்கை சமனப்படும்.
விதையின் தோலைப் போக்கி, நுண்ணியதாகப் பொடிசெய்து கண்ணில் தூவியாவது அல்லது தேங்காய் எண்ணெயில் குழைத்து கண்ணோய்க்கு இடல் வழக்கு. இதனால் சீழ்பிடிக்கும் கண்ணோய் தீரும் .
வேரை குடிநீரிலிட்டுச் சாப்பிட்டுவர நீரிழிவு, ஆண்குறி எரிச்சல் தணியும். வேண்டுமானால் இத்துடன் கற்கண்டு , பசுவின் பால் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆவாரை வேர்ப்பட்டையை கஷாயஞ் செய்து அதற்கு நேர் வெள்ளாட்டுப் பால் அல்லது பசுவின் பால் , எண்ணெய் இவற்றைக் கூட்டித் தைலம் செய்து தலைமுழுகி வர, உடல் வெப்பந் தணியும் , கண் குளிரும் .
ஆவாரந்துளிர் , கல்மதம், கொன்றைவேர் ஆகிய மூன்றையும் புளித்த மோரில் கலக்கிக் குடிக்க நீரிழிவு நோய் நீங்கும் .
ஆவாரம் , சீந்தில், தில்லைச்செடி இவைகளின் வேர் , இலை , தண்டு , பூ முதலியவற்றை முறையே மூன்று , இரண்டு , ஒன்று எனும் எடையாகக் கொண்டு, இளவறுப்பாக வறுத்து ஒன்றிரண்டாக இடித்துப் பொடியாக்கி அரைப்படிக்கு அரைப்படி நீரிட்டு, அரைக்கால் படியாகக் குடிநீர் செய்து அதில் பால் கூட்டி காலை , மாலை கொடுக்க நீரிழிவு போகும் . நீரில் சர்க்கரை அளவும் படிப்படியாக குறையும்.
நன்றி: தினமலர் நாளிதழ்.
தொகுப்பு : வானக வானம்பாடிகள் குழு.
No comments:
Post a Comment