Monday, November 30, 2015

தூக்கத்தை கெடுக்கும் மூக்கடைப்பு பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்


நீங்கள் இரவில் மூச்சு விட முடியாமல் மூக்கு அடைப்பால் கஷ்டப்படுபவராயின், உங்களுக்காக இங்கு மூக்கடைப்பை சரிசெய்யும் எளிய இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
• சிறிது பட்டையை எடுத்து பொடி செய்து, நீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, உச்சந்தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவது குறையும்.
• ஆகாயத்தாமரை மற்றும் ஆதொண்டை வேரை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயை தலைக்கு தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளித்து வந்தால், மூக்கடைப்பு மற்றும் தொண்டைக் கட்டு போன்றவை நீங்கும்.
• நொச்சி இலைகளை அரைத்து சாறு எடுத்து, நல்லெண்ணெயில் சேர்த்து சூடேற்றி, பின் அதனை தலைக்கு தடவி குளித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
• மாவிலைகளை காய வைத்து பொடி செய்து, நெருப்பில் போட்டு அதிலிருந்து வெளிவரும் புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு உடனே நீங்கும்.
• சுக்கை ஒரு கப் நீரில் போட்டு, தண்ணீர் பாதியாக வரும் வரை நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் பால் ஊற்றி கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை என குடித்து வந்தால், மூக்கடைப்பு வருவது தடுக்கப்படும்.
• விரலி மஞ்சளை நெருப்பில் சுட்டு, அதிலிருந்து வெளிவரும் புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு உடனே நீங்கும்.
• வெதுவெதுப்பான நீரில் இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், மூக்கடைப்பு போய்விடும்.
• ஒரு துணியில் யூகலிப்டஸ் ஆயிலை சில துளிகள் விட்டு, அந்த துணியை முகர்ந்து வந்தால், மூக்கடைப்பு உடனே விலகும்.
• வெங்காயத்தை தோலுரித்து வெட்டி, அதனை 4-5 நிமிடம் முகர்ந்து வந்தால், மூக்கடைப்பில் இருந்து உடனே விடுபடலாம்.

Sunday, November 29, 2015

அக்னி அஸ்திரம்:

அக்னி அஸ்திரம்:
புகையிலை ½ கிலோ,பச்சை மிளகாய் ½ கிலோ,பூண்டு ½ கிலோ, வேப்ப இலை 5 கிலோ ஆகியவற்றை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.அரைத்த கலவையை 15லிட்டர் மாட்டு சிறுநீரில்(கோமியம்) நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். இதை 4 முறை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டினால் அக்னி அஸ்திரம் தயார்.
காய்ப்புழு,தண்டு துளைப்பான்,கொள்ளை நோய் போன்றவற்றை கட்டுப்படுத்த இதை பயன்படுத்தலாம
‘‘பசு மாட்டுச் சிறுநீரை எத்தனை நாட்கள் வரை சேமிக்கலாம்?’’
‘‘இந்தத் தகவல், உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அதுதான் உண்மை. பசுமாட்டுச் சிறுநீரை
100 ஆண்டுகள்கூட சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். எந்த அளவுக்கு காலதாமதமாக பயன்படுத்துகிறோமோ... அந்த அளவுக்கு அதன் வீரியம் கூடும். ஆனால், பசுஞ்சாணத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ... அவ்வளவு விரைவாக பயன்படுத்திவிடவும். அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் பயன்படுத்திவிடுங்கள். இதற்கு மேல் சென்றால், சாணத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சி குறையும். பின்பு நாம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது.’’
-ஜீரோபட்ஜெட் பிதாமகர் சுபாஷ் பாலேக்கர்...

Thursday, November 26, 2015

This man from Assam has invented over 100 engineering devices to solve agricultural problems

Uddhab Bharali was born in Lakhimpur, Assam. He excelled in academics, and was notorious for asking too many questions. He dropped out of college in 1987 due to poverty. Trying to cope with his situation, he continued building gadgets in his free time. When the bank authorities told them to vacate their home due to his father’s debts, Uddhab built a polythene-making machine and sold it for Rs 67,000, against the market price of 5 lakhs.
yourstory-uddhab-bharali
Although he continued building products for rural and commercial purposes, it was only in 2005, when Uddhab’s talent was truly recognized. The National Innovation Foundation took him aboard as a grassroots innovator, where he soon came up with a design for a pomegranate de-seeding machine. His machine was recognized as the first of its kind not only in India, but across the world. As reported by The Hindu, Uddhab has also started a research workshop in his hometown to help local communities solve their technological needs.
The serial innovator has since then built a mini tea plant which helps small-time farmers, an areca nut peeling machine with a capacity to peel 100-120 nuts in a minute, a portable cassava peeler that can process up to 5 kg of cassava per minute, a garlic peeling machine, a tobacco leaf cutter, a paddy thresher, a cane stripping machine, a brass utensil polishing machine, a safed musli peeling machine, a jatropha de-seeder, a mechanized weeding machine, and a trench digger; among over hundred other inventions, mostly solving problems in the field of agriculture.
Uddhab recieved the ‘President’s Grassroots Innovation Award’ in 2009. He also received the ‘Shristi Samman Award’ in 2007. He is the winner of engineering design contest organized by NASA Tech ‘Create the Future Design Contest’ for the year 2012 and 2013. He also won the ‘Rashtriya Ekta Samman, in 2013. In an interview withRediff, Uddhab said, “Even now, I have 53 projects on hand and I am currently responsible for an average of eight projects a month.” He uses the money he makes in housing 20 underprivileged kids, providing them with food, amenities, and training them in technology.

Article from  - http://social.yourstory.com/

Wednesday, November 25, 2015

வாய்ப்புண். உதடுவெடிப்பு குணமாக பாட்டி வைத்தியம்


1. கோவைக்காயில் சாம்பார்,கூட்டு செய்து சாப்பிட வயிற்றுப்புண், வாய்ப்புண், உதடுவெடிப்பு குணமாகும்
2. சீரகத்தை சம அளவு நாட்டுசர்க்கரையுடன் பொடித்து காலைமாலை 1தேக்கரண்டி சாப்பிட உதடுவெடிப்பு,உதட்டுப்புண் குணமாகும்
3. திருநீற்றுப்பச்சை 4 இலைகளை மென்று சாறை விழுங்க வாய்ப்புண் குணமாகும்
4. ஒரு பிடி நெல்லியிலைகளை நன்கு கொதிக்கவைத்து இளம்சூட்டில் வாய் கொப்புளிக்க வாய்ப்புண் குணமாகும்
5. மணத்தக்காளி இலைகளை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வாய்ப்புண் குணமாகும்
6. மணத்தக்காளியிலைகளை மென்று சாறை 1நாளைக்கு 6முறை விழுங்கி வர வாய்ப்புண் குணமாகும்
7. மருதாணிஇலைகளை 1மணிநேரம் ஊறவைத்து காய்ச்சிய கஷாயத்தால் வாய்கொப்புளிக்க வாய்வேக்காடு,வாய்ப்புண்,தொண்டைப்புண் ஆறும்
8. ஆவாரைபட்டையை பொடித்து கசாயமிட்டு வாய்கொப்புளிக்க வாய்ப்புண், வாய்துர்நாற்றம் நீங்கும்
9. சிவனார்வேம்பு வேரால் பல்துலக்கிவர பல்வலி, ஈறுவீக்கம்,வாய்ப்புண் குணமாகும்
10. கொய்யாஇலைகளை மென்று பல்தேய்க்க பல்வலி,வாய்ப்புண் குணமாகும்

சொத்து பணயம் இல்லாமல் ரூபாய் ஒரு கோடி வரை வங்கி கடன் பெரும் திட்டம்:


CGTMSE குறு, சிறு தொழில்களுக்கான கிரடிட் கேரண்டி பண்ட் திட்டம்:
குறு, சிறு தொழில்கள் தொடங்கும் தொழில்முனைவோருக்கு குறிப்பாக புதிய தொழில் துவங்கும் தொழில்முனைவோர் தங்களிடம் சிறப்பான தொழில் திட்டமாக இருந்தால் வங்கிகளில் ரூபாய் ஒரு கோடி வரை எந்த விதமான சொத்து பிணயமும் (Collateral Security) இல்லாமல் வங்கி கடன் வழங்கும் திட்டம்.
இத்திட்டத்தினை மத்திய அரசும், சிட்பியும் இணைந்து செயல்படுத்துகிறது. நீங்கள் புதிய தொழில்முனைவோரகவும் லாபகரமான தொழில் தேர்வு செய்யும் பட்சத்தில் அத்திட்டம் புதிய கண்டுபிடிப்பாக இருந்தாலும் வங்கிகள் அந்த திட்டத்திற்கு எந்தவித சொத்து பிணயமும், தனிநபர் ஜாமீனும் இல்லாமல் கடன் வழங்கும். இந்த கடன் காலகடன் (Term Loan) மற்றும் நடைமுறை மூலதன கடன் (Working Capital Loan) இரண்டுமாகவும் இருக்கலாம்.
இத்திட்டத்தில் தாங்கள் இணைய CGTMSE -யுடன் இணைய வேண்டும். முதலாண்டு வங்கி கடன் தொகையில் 1.5% கட்டணமாகவும் அடுத்த ஒவ்வொரு ஆண்டும் ௦.75% கட்டணமாகவும் கட்ட வேண்டும்.
ஒருவேளே தொழில் நலிவுறும் பட்சத்தில் CGTMSE வங்கிக்கு கீழ்க்கண்ட வகையில் பணத்தை திருப்பி செலுத்தும்.
5 லட்சம் வரை – 85%
5 முதல் 50 லட்சம் வரை - 80%
50 லட்சம் முதல் 1 கோடி வரை – 50%
என்ற முறையில் வங்கிகளுக்கு திரும்ப கொடுக்கும்.
இத்திட்டத்தில் ஒரு சில வங்கிகள் தவிர அனைத்து வங்கிகளும் சேரும்.
லாபம் தரக்கூடிய தெளிவான திட்டங்கள், புது விதமான தொழில்களுக்கும் மற்றும் புதிய தொழில் முனைவோரும் இத்திட்டத்தில் கடன் பெற வாய்ப்பு உள்ளது.
இதில் வங்கியின் மேலாளர் முடிவே இறுதியானது.
மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள இணைய முகவரி மூலம் அணுகவும்..
www.cgtmse.in Toll Free no. : 1800222659
இது கடன் திட்டம் அல்ல...தொழில் நடத்துவதற்கான திட்டமாகும்.
C.R. Business Solutions
1B,Professors Colony, Pudukottai Main Road,
Subramaniya Puram, Trichy 620020
Cell 9789737886, 9345104264,
Email : crbusinesssolutions2014@gmail.com

அருகம்புல் சாகுபடி மாதம் 50,000 அசத்தல் வருமானம்

சென்னை, ஆவடி  பருத்திபட்டை சேர்ந்த திரு.தயாளன் அவர்களுக்கு வயது 22. இவரின் கல்வி தகுதி பட்டையம் எந்திரவியல். ஆனால் இன்று விவசாயம் செய்து வரும் இவரின் விவாசய யுத்திகளை நமது சிறு தொழில் முனைவோர் .காம் இணைய இதழுக்காக இங்கு பகிர்ந்து உள்ளார்.

விளம்பரம்: FSSAI தர சான்றிதழ் பெற்ற செக்கில் ஆட்டிய எண்ணை, விற்பனை செய்யdownloadமுகவர் தேவை : 90420 23444


பட்டையம் முடித்து வேலைக்கு சென்றால், இன்றைய சூழ்நிலையில் மாதம் 6000 மட்டுமே சம்பளமாக பெற முடியும் என்று என் நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன். எனது அப்பா செய்து வரும் விவசாயத்தை நாமும் பார்க்கலாம் என்று எண்ணி விவசாயத்தில் இறங்கினேன்.
விவசாயத்தில் தினமும் வருமானம் பெற என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்தேன். அப்பொழுதுதான் சந்தையில் அருகம் புல் மற்றும் கீரைக்கு இருக்கும் சந்தை வாய்ப்பு என்னை ஈர்த்தது. எனவே அருகம் புல் மற்றும் கீரை சாகுபடி செய்யலாம் என்று தீர்மானித்து, 1 ஏக்கர் நிலத்தை 20வது பகுதிகளாக பிரித்து ஒரு நாள் இடைவெளியில் 1 ஏக்கர் முழுவதும் அருகம் புல் விதைத்து எனது விவசாய தொழிலை தொடங்கினேன். விதைத்த 30 கழித்து அறுபடை செய்ய தொடங்கினேன், சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகில் இருந்ததால் எனக்கு விறுபனை செய்வது எளிதாக இருந்தது.

சிறுதொழில்முனைவோர்.காம்  இணைய இதழில் விளம்பரம் செய்து பயன் பெறுங்கள் : 80561 35035 


அதாவது 5 சென்ட் நிலத்தில் இருந்து 15 நாள் ஒன்றுக்கு 3000 வரை வருமானம் கிடைத்தது. ஒரே நாளில் விவசாயம் செய்து ஒரே நாளில் சந்தை படுத்தினால், விலை இருக்காது என்பதால் தினமும் 5 சென்ட் நிலத்தில் மட்டும் அறுவடை செய்து, தினமும் சந்தைக்கு கொண்டு சென்றேன். எனவே தினமும் 3000 ரூபாய் எளிதாக சம்பாதிக்க முடிந்தது.
திரு.தயாளன் அவர்களின், பண்ணையில் அருகம்புல் வளர்ந்து அறுபடைக்கு நிற்கும் காட்சி
இடு பொருள் மற்றும் வேலை ஆட்கள் செலவு போக, 5 சென்ட் நிலத்தில் இருந்து மதம் 4000 ரூபாய் வருமானம் விதம் 1 ஏக்கரில் இருந்து மதம் 40,000 ரூபாய் பெற முடியும் என்பதை அனுபவம் மூலம் உணர்ந்தேன். இதை போல் கீரை மற்றும் துளசி 1 ஏக்கரில் நிலத்தில் மதம் 40,000 வருவாய் பெற்றுத்தருகிறது.
எனவே என்னிடம் மீதம் இருந்த 6 ஏக்கர் நிலத்திலும் அனைத்து வகையான கீரைகளும், துளசி மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்து உள்ளேன். சந்தையில் இந்த பயிர்களுக்கு தினமும் தேவை இருப்பதால், சந்தை வாய்ப்பு சிறப்பாக உள்ளது. மழை காலங்களை தவிர்த்து, மீதம் உள்ள காலங்கள் முழுவதும் குறைந்த பசன வசதி இருந்தாலே இந்த பயிர்களை சாகுபடி செய்வது எளிது.
எனது விவசாய அனுபவத்தின் மூலம், 1 ஏக்கர் நிலத்தில் மாதம் 50,000 சம்பாதிக்க முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் எனக்கு இல்லை. மேலும், விவசாயம் நல்ல இலாபம் தரும் தொழில் ஆகும், ஆனால் உடல் உழைப்பு அதிகம். உடல் உழைப்பு அதிகம் என்பதாலும், இன்றைய தேவை, விவசாய யுக்திகள் மற்றும் சந்தை படுத்தும் வழி தெரியாமல் பயிர் செய்து விட்டு, உழவு தொழிலே வேண்டாம் என்று கூறுவது மிக பெரிய தவறு ஆகும்.
மேலும் இவரிடம் அனைத்து வகையான கீரைகளும், துளசி, அருகம்புல் மற்றும் காய்கறிகளும் தினமும் புத்தம் புதிதாக (FRESH) கிடைக்கும்
மேலும் இவரை வாழ்த்த :
திரு. தயாளன் அவர்கள்
வேலம்மாள் பள்ளி அருகில்,
பருத்தி பட்டு, ஆவடி. சென்னை
போன் :99400 59617.
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.

Friday, November 20, 2015

காய்ச்சல் வந்தால் என்ன செய்யலாம்!

காய்ச்சல் வந்தால் என்ன செய்யலாம்!
ம.செந்தமிழன்
காய்ச்சலும் சளியும் பரவலாக உருவாகும் சூழல் இது. நவீன மருந்துகள் இல்லாமல் இச்சூழலைக் கடக்க விரும்புவோருக்கான பதிவு இது.
காய்ச்சலுக்கும் சளிக்கும் எந்த மருந்தும் தேவையில்லை என்பது முதல் செய்தி. ஏன் தேவையில்லை என்பதைச் சற்று கவனமாக அறிந்துகொள்ளுங்கள்.
இப்போது மழை பெய்து நிலம் குளிர்ந்து கிடக்கிறது. மழை நின்று, வெயில் அடித்தாக வேண்டும் என்ற தேவை உருவாகியுள்ளது. ஏன் வெயில் தேவை என்றால், வெப்பம் உருவானால்தான், நிலத்தின் குளிர்ச்சி குறைந்து இயல்பான சூழல் ஏற்படும். மிதமான வெப்பம்தான் இந்த நிலப்பகுதியின் இயல்பான பருவநிலை. மிகையாகக் குளிர்ந்த நிலம் தனது இயல்பான மிதவெப்பத்தை இழந்துவிட்டது எனப் பொருள்.
அதிகமான வெப்பம்தான் குளிரைப் போக்கி, நிலத்தின் இயல்புநிலையை மீட்டெடுக்கும். ஆகவே, வெயில் வந்து நிலத்தின் பருவநிலையைச் சீர்செய்கிறது.
’அண்டமும் பிண்டமும் ஒன்றுதான்’ எனும் ஆசான் திருமூலர் வாக்கினை நினைவில் கொள்ளுங்கள்.
மழை மற்றும் குளிர் காலங்களில் உடலின் இயல்பான வெப்பம் குறைகிறது. இந்த நிலையில் உடலில் குறைந்த வெப்பத்தில் பெருகும் நுண்ணுயிரிகள் அதிகரிக்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் கிருமிகள் என அழைக்கப்படுபவை. பருவநிலை மாற்றத்திற்கேற்ப நுண்ணுயிரிகளின் வகைகளும் எண்ணிக்கையும் மாறிக்கொண்டுதானிருக்கும். நிலத்திலும் இதுதான் நிகழ்கிறது. நிலம் ஈரமாக இருக்கும்போது நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகும். உடலிலும் இதேநிலைதான் உருவாகிறது. வெப்பம் குறைந்த உடலில், பலவகை நுண்ணுயிரிகள் பெருகி வளரும்.
இந்த நுண்ணுயிரிகள் எங்கிருந்து வந்தன எனக் கேட்டால், அவை எல்லாம் உடலின் உள்ளே இருந்தவைதான். வளர்ந்து பெருகுவதற்கான சூழல் இல்லாததால் இதுவரை அவை எல்லாம் உறங்குநிலையில் இருந்தன. சூழல் மாறியதும் அவற்றின் வளர்ச்சியும் பெருக்கமும் அதிகரிகிறது. மேலும் ஒரு சேதி என்னவெனில், இந்த நுண்ணுயிரிகள் யாவும் உடலின் இயக்கத்திற்குத் தேவையற்ற கழிவுகளில்தான் வளரும் தன்மை கொண்டவை. நீண்ட காலமாகத் தேங்கி இருக்கும் மலம், செரிக்காத உணவு, சிறுநீர், சளி போன்ற கழிவுகளில்தான் கிருமிகள் எனப்படும் நுண்ணுயிரிகள் வளரும்.
கழிவுத் தேக்கம் இல்லாதவர்களின் உடலில் எந்தப் பருவநிலை மாற்றமும் காய்ச்சலை, சளியை ஏற்படுத்துவதில்லை.
ஆக, உடலின் பருவநிலை குளிர்ந்ததும் உடலின் கழிவுகளில் வளரும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காத அளவு உயர்கிறது. இந்த உயர்வை உடனடியாகக் குறைக்க வேண்டியது உடலின் தேவையாக மாறுகிறது. அவ்வாறு குறைக்காமல் போனால், இந்தக் கழிவு உயிரிகள் மேலும் மேலும் பெருகி உடலின் ஆற்றலைச் சிதைக்கும். விளைவாக, பல உறுப்புகள் செயலிழப்பும் நேரலாம். இந்தத் தேவையின் அடிப்படையில்தான் காய்ச்சல் வருகிறது.
உடலின் கழிவுகளையும் அவற்றில் பெருகி வளரும் நுண்ணுயிரிகளையும் கட்டுப்படுத்தவும் வெளியேற்றவும்தான் காய்ச்சல் வருகிறது. வெப்பநிலையை உயர்த்தி, கழிவு உயிரிகள் வளருவதற்கான சூழலைக் கெடுத்து, அவற்றை வெளியேற்றும் உடலின் செயல்பாடுதான் காய்ச்சல். நிச்சயமாக, காய்ச்சல் என்பது நோய் அல்ல. உடலின் உள்ளே இருக்கும் நோயின் வெளிப்பாடுதான் காய்ச்சல். ஆகவே காய்ச்சலைக் கண்டு அஞ்சாதீர்கள். அது உங்கள் உடலைப் பராமரிக்கவே வந்துள்ளது.
உடலின் கழிவு உயிரிகள் வெளியேற்றுவதற்கு எவ்வளவு வெப்பம் தேவையோ அந்தளவு வெப்பம் உருவாகும். இந்த வெப்பத்தை அனுமதிக்க வேண்டும். இதுதான் நலமாக வாழ்வதற்கான எளிய வழி. ஆம், காய்ச்சல் வெப்பத்தைக் குறைக்க நீங்கள் செய்யும் எந்த நடவடிக்கையும் உடலின் பணியில் குறுக்கிடுவதுதான்.
சிலவகை மாத்திரைகளை விழுங்கியதும் உடல் வியர்க்கிறது என மகிழ்ச்சி அடையாதீர்கள். அது காய்ச்சலுக்கான தீர்வு அல்ல. மாறாக, உடலின் வெப்பத்தைக் குறைத்து கழிவு நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு உகந்த வெப்பநிலையை அந்த மாத்திரைகள் உருவாக்கிவிடுகின்றன. இவற்றோடு இணைத்துத் தரப்படும் உயிர்க்கொல்லி மருந்துகளும் (ஆண்டி பயாடிக்) வேறுவகை நுண்ணுயிரிகள்தான். இவை உடலில் பெருகி, உடலின் உள்ளே இருக்கும் உயிரிகளை அழிக்க வேண்டும் என்பது நவீன மருத்துவத்தின் அணுகுமுறை. ஆனால், உயிர்க் கொல்லி மருந்துகளின் வழியாக உடலுக்கு உள்ளே அனுப்பப்படும் நுண்ணுயிரிகள் உடலுக்குப் புதிய சுமைகளாகத்தான் மாறுகின்றன.
இவற்றின் வளர்ச்சியையும், இவற்றின் வருகையால் உடலுக்குள் உருவாகும் நுண்ணுயிர்ப் பெருக்கத்தின் மாற்றங்களையும் கையாள முடியாமல்தான் நவீன சமூகம் தள்ளாடிக் கொண்டுள்ளது.
இதனால்தான், ‘காய்ச்சலுக்கு உடனடியாக ஆண்டிபயாடிக் கொடுக்காதீர்கள்’ என தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
உடலின் உள்ளே இருக்கும் தேவையற்ற நுண்ணுயிரிகளை உடலின் வெப்பநிலை வெளியேற்றும் உன்னத செயல்தான் காய்ச்சல். இதில் நாம் தலையிட்டு தவறு செய்யும்போது, அந்த நுண்ணுயிரிகள் உடலில் தங்கி நீண்டகால நோய்களை வரவழைக்கின்றன.
காய்ச்சல் வந்ததும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
1. காய்ச்சல்காரர் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும்.
2. தாகம் எடுத்தால், வெந்நீரை ஆறவைத்தோ, வெதுவெதுப்பாகவோ பருக வேண்டும். தாகம் இல்லாமல் ஒரு சொட்டு நீர் கூட பருக வேண்டாம்.
3. காய்ச்சல் துவக்கநிலையில் இருக்கையில், பசிக்கும்போது, அரிசிக் கஞ்சி, இட்லி, இடியாப்பம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். இட்லி இடியாப்பத்திற்கு சர்க்கரை தொட்டுக் கொண்டால் நல்லது. குழம்பு, சட்னிகளைத் தவிர்க்க வேண்டும்.
4. காய்ச்சல் உயர்ந்து பின்னர் இறங்கும். அந்த நிலையில் பசிக்கும்போது, இரசம் ஊற்றி சோற்றை நன்கு கரைத்து உட்கொள்ளலாம். இரசத்தில் புளிக்குப் பதில் தக்காளி சேர்ப்பது நல்லது. இதற்கு பருப்புத் துவையல், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி துவையல் வகைகள் தொட்டுக்கொள்ளலாம்.
5. காய்ச்சலின் அளவு மிகவும் அதிகமானால், குளிர்ந்த நீரில் துணியை நனைத்து நெற்றியில் ஒத்தடம் தரவேண்டும். உடல் குளிரும் அளவுக்கு ஒத்தடம் தரக் கூடாது. அதிக வெப்பம் குறையும் அளவு தந்தால் போதும்.
6. காய்ச்சல் இருக்கும்போது, பசிக்காமல் சாப்பிடுவது மிகமோசமான விளைவுகளை உருவாக்கும். மேலும் தாகம் இல்லாமல் தண்ணீர் பருகுவதும் நல்லதல்ல. எக்காரணம் கொண்டும் உடலின் தேவையைப் புரிந்துகொள்ளாமல் உணவை நாடாதீர்கள்.
7. மேற்கண்ட உணவுகள் தவிர வேறு எந்தவகை உணவையும் பானத்தையும் தவிர்ப்பது சிறந்தது. குறிப்பாக, பால் பொருட்களை நிறுத்திவிடுவது மிக முக்கியம்.
8. நிலவேம்பு போன்ற கசாயங்களைப் பருகும் வழக்கம் இப்போது அதிகரித்துள்ளது. முறையான மருத்துவ ஆலோசனை இல்லாமல் நிலவேம்பு போன்ற மருந்துகளைப் பருகுவது நல்லதல்ல.
இவை தவிர காய்ச்சல், சளி ஆகிய தொல்லைகளின்போது உடலுக்கு உதவி செய்யும் சில உணவு மருந்துகளைக் கீழே இணைத்துள்ளேன். இவை செம்மை நலமையங்களில் கற்றுத்தரப்படுபவை.
சளி வெளியேற்றத்திற்கு உதவி செய்யும் உணவு மருந்துகள்:
மிளகு கசாயம்
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 7 எண்ணிக்கை
இவ்விரண்டையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். பின்னர் சட்டியில் இவற்றை ஒன்றாகக் கொட்டி, நன்கு தேக்கரண்டிகள் பனை வெல்லத் தூளைத் தூவ வேண்டும். வெல்லத் தூள் பாகுபோல் உருகும். இப்பாகு சட்டியில் ஒட்டாமல் கிளற வேண்டும். பின்னர், ஒன்றரை தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். சுண்டக் காய்ச்சிய பின்னர் அடுப்பை நிறுத்தி விட்டு, இந்த நீரில் பின்வரும் இலைகளைப் போட வேண்டும்:
1. துளசி
2. கற்பூர வல்லி (ஓம வல்லி)
3. வேப்பிலைக் கொழுந்து
இவ்விலைகளைப் போட்ட பின்னர் மூடி வைத்து வெதுவெதுப்பான சூட்டில் பருக வேண்டும். இந்த இலைகள் கிடைக்கவில்லையென்றால் பரவாயில்லை. காய்ச்சிய நீரைப் பருகலாம்.
முறை:
உறங்கச் செல்வதற்கு ஒருமணி நேரம் முன்பு பருகலாம். தொடர்ந்து ஐந்து நாட்கள் மட்டும்தான் பருக வேண்டும்.
தூதுவளை வறுவல்
தூதுவளை இலைகளை (நான்கு அல்லது ஐந்து) நெய்யில் வதக்கி, ஒரு பிடிச் சோறுடன் பிசைந்து உண்ண வேண்டும்.
முறை:
மாலை வேளையில் உண்ண வேண்டும். தொடர்ந்து ஐந்து நாட்கள் மட்டும்தான் உட்கொள்ள வேண்டும்.
சீரகத் தண்ணீர்
ஒரு சட்டித் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். அதே சூட்டில், சிறிய தேக்கரண்டி சீரகம், ஏழு மிளகுகள் போட்டு மூடி வைத்து விட வேண்டும். வெதுவெதுப்பான பதத்தில் பருகலாம். ஒவ்வொரு முறை பருகும்போதும் சன்னமாகச் சூடேற்றிக் கொள்வது நல்ல பலன் தரும்.
சூழல் சரியாகும் வரை, வழக்கமான குடிநீருக்குப் பதில் சீரகநீரை மட்டுமே பருகுவது மிகுந்த நற்பலனைத் தருகிறது. செரிமானம் மேம்படவும், சளி வெளியேறவும், மூச்சுச் சிக்கல்களைச் சீர்செய்யவும் சீரக நீர் உதவியாக உள்ளது. காய்ச்சலில் இருப்போர், சீரக நீர் பருக வேண்டாம். வெந்நீரை ஆறவைத்து மட்டுமே பருக வேண்டும். சளித் தொல்லையில் இருப்போரும், காய்ச்சலுக்குப் பின்னும், செரிமானச் சிக்கல் உள்ளோரும் சீரக நீர் பருகலாம்.
மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு உங்கள் மற்றும் உங்கள் உற்றார் உடல்நலனை மேம்படுத்திக்கொள்ளுங்கள். உடலின் வெப்பநிலை மாற்றங்களை நோய் எனப் புரிந்துகொண்டு அஞ்சாதீர்கள். மிக முக்கியமாக, காய்ச்சல்களுக்கு வைக்கப்படும் பெயர்களின் மீது அக்கறை காட்டாதீர்கள்.
மருந்தில்லா வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கும் இலட்சக் கணக்கான மக்கள் காய்ச்சலைக் கண்டு கலங்காமல் வாழ்கிறார்கள். ஒருவகையில், காய்ச்சல் வந்தால் மகிழ்ச்சி அடையும் மனிதர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். உடலின் உள்ளே இருக்கும் கழிவு உயிரிகளை வெளியேற்றும் வெப்பத்தை வரவேற்பதுதானே உண்மையான அறிவியல்!

Wednesday, November 18, 2015

மறை நீர் (Virtual water)


பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?
மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.
ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.
புத்திசாலி நாடுகள்!
நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.
இது இந்திய நிலவரம்!
முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.
மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்
வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.
சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.
ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.
பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.
தண்ணீருக்கு எங்கு கணக்கு?
ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.
இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.
மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.
நாம் அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு இது.
உங்களின் அனைத்து குழுக்களுக்கும் பகிர்வு செய்யுங்கள்

இயற்கை விவசாயத்தில் சாதித்த பெண் விவசாயி :


மானாவாரி எனப்படும் வானவாரி வேளாண்மை மிகவும் கடினமானது மட்டுமல்ல, நிச்சயமற்றதும்கூட.எதிர்பார்ப்புக்கு மாறாக மழைப்பொழிவு குறைந்துவிட்டால், விளைச்சல் கிடைக்காது. இதைச் சமாளிக்க நமது முன்னோர் நாட்டுரக விதைகளை, அதாவது வறட்சியைத் தாங்கும்தன்மை கொண்ட விதைகளைப் பயன்படுத்தினர். ஆனால், பசுமைப் புரட்சிக்குப் பின்னர் வீரிய விதைகள் என்ற பெயர் கொண்ட தாக்குப்பிடிக்காத விதைகள், அதாவது வறட்சியைத் தாங்க முடியாத விதைகள் வந்தன. விளைவு போதிய மழை பெய்யாதபோது, பயிர்கள் கருகிப் போயின.
வேளாண்மைக்கு அரசின் ஆதரவு பொதுவாகவே குறைவு, அதுவும் மானாவாரி வேளாண்மைக்கு மிக மிகக் குறைவு. இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில், நமது உணவில் புரதச்சத்துத் தேவையை மானாவாரி நிலங்களே 55 சதவீதம் இன்னும் பூர்த்தி செய்துவருகின்றன. இப்படிப்பட்ட மானாவாரியில், இயற்கை வேளாண்மையில் சாதித்துவருகிறார் ஒரு பெண் விவசாயி.
வசதியின்றியும் சாதிக்கலாம் :
இயற்கைவழி வேளாண்மையிலும் பல பெண்கள் முன்னோடியாக உள்ளனர். அவர்களில் நாகஜோதியும் ஒருவர். `பணக்காரப் பண்ணையாளர்கள் மட்டும்தான் இயற்கை வேளாண்மை செய்ய முடியும்’ என்ற கருத்தைத் துணிச்சலாக முறியடித்தவர் இவர். மதுரை மாவட்டம் தே. கல்லுப்பட்டி அருகில் உள்ள சுப்புலாபுரம் என்ற சிற்றூரைச் சேர்ந்த இவர், தன்னுடைய நிலத்துக்குப் பாசன வசதி ஏதும் இல்லாத நிலையில் இதைச் சாதித்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாக வேளாண்மையில் இவர் ஈடுபட்டு வருகிறார். பத்தாம் வகுப்புவரை படித்துள்ளார். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் படித்து வருகின்றனர். இவருடைய குடும்பத்துக்கு எட்டரை ஏக்கர் மானாவாரி நிலம் சொந்தமாக உள்ளது. இவரும் இவருடைய கணவரும் தொடர்ந்து அதில் விவசாயம் செய்துவருகின்றனர்.
இரண்டு ஏக்கர் பரிசோதனை :
பசுமைப் புரட்சியின் தாக்கம் இவர்களையும் விட்டுவைக்கவில்லை. அதிக விளைச்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேதி உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்துள்ளார் நாகஜோதி. முதலில் விளைச்சல் கூடியதுபோல் தென்பட்டாலும், பிறகு தொடர்ந்து படிப்படியாகக் குறையத் தொடங்கியது. நிலம் கடினத்தன்மை அடைந்தது.
உரம், பூச்சிக்கொல்லி வாங்குவதற்கு அதிகப் பணம் செலவானது. விவசாயம் கட்டுப்படியாகாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்போதுதான் தமிழக உழவர் தொழில்நுட்பக் கழகம் போன்ற அமைப்புகளின் மூலம் இயற்கைவழி வேளாண் உத்திகளை அறிந்துகொண்டு, நாகஜோதி பயன்படுத்தத் தொடங்கினார்.
வியந்துபோன விவசாயிகள் :
முதலில் இரண்டு ஏக்கர் நிலத்தில் தொழு உரம், மண்புழு உரம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியம் போன்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்தினார். உளுந்து, பாசிப்பயறு, பருத்தி பயிர் செய்தார். இவரே பூச்சிவிரட்டிகளை தயாரித்து, கைத்தெளிப்பான் மூலம் பயிர்களில் தெளித்தார். இதன் விளைவுகளை அந்த ஆண்டே பார்க்க முடிந்தது. நிலத்தில் களை அதிகம் இல்லை, இடுபொருள் செலவு குறைந்தது, விளைந்த பயறுகள் எல்லாம் திரட்சியாக இருந்தன.
அந்த ஆண்டு பயிர்களைப் பூச்சிகள் தாக்கவில்லை. இவருடைய அண்டை அயலார் இதைப் பார்த்து வியந்தனர். அவர்களால் நம்பமுடியவில்லை. வெளியூரில் இருந்தெல்லாம் பார்க்க வந்திருக் கிறார்கள். இரண்டாம் ஆண்டிலேயே ரசாயன வேளாண்மையைவிட, இயற்கை வேளாண் முறையில் அதிக விளைச்சலை எடுத்துவிட்டார்.
பருத்தி அதில் ஊடுபயிராகக் குதிரைவாலி, துவரை என்று பலவிதமான மானாவாரிப் பயிர்களை இவர்கள் பயிரிட்டுவருகின்றனர். வேளாண்மை பணி இல்லாத காலங்களில், தனது விளைபொருட்களுக்கு மதிப்பு கூட்டி, முறுக்கு போன்ற பண்டங்களாக மாற்றி விற்பனை செய்கிறார். வேதி வேளாண்மை, இயற்கை வேளாண்மை இரண்டுக்கும் இடையிலான வரவு – செலவு கணக்கை இவர் வைத்துள்ளார். அதிலிருந்து இயற்கை வேளாண்மை எப்படி லாபம் ஈட்டுவதாக உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்
ஆனால், இத்தனையும் இருந்தும் இவருடைய கடின முயற்சிக்கு அரசின் ஆதரவு இதுவரை கிடைக்கவில்லை.
எதில் செலவு குறைவு?
நாகஜோதி தனது பண்ணையத்தின் வரவு செலவு மதிப்பைக் கணக்கிட்டுள்ளார். இரண்டு ஏக்கர் நிலத்தில் இயற்கை வழி வேளாண்மை விவரம் (2010-ம் ஆண்டு கணக்கு):
செலவு :
மண்புழு உரம் (500 கிலோ x ரூ. 4)- ரூ. 2000, அசோஸ்பைரில்லம் (82 பாக்கெட் x தோராயமாக ஒரு பாக்கெட் விலை ரூ. 6) – ரூ. 510,தொழுவுரம் (2 டிராக்டர் வாடகை ரூ. 250)- ரூ. 250 (குப்பை இவரிடமே இருந்ததால் குப்பைக்குப் பண மதிப்பு இல்லை), களை எடுப்பு – ரூ. 600, அறுவடைச் செலவு – ரூ. 250, சொந்த உழைப்பு ( 2 ஏக்கர்) – ரூ. 500, உழவுச் செலவு – ரூ. 1000
மொத்தச் செலவு – ரூ. 5110
வரவு :
பாசிப்பயறு (300 கிலோ x ரூ.30) – ரூ. 9000,உளுந்து (200 கிலோ x ரூ.28) – ரூ. 5600,பருத்தி (300 கிலோ x ரூ. 20) – ரூ. 6000
மொத்த வரவு – ரூ. 20600
செலவு போக நிகர வருமானம் ரூ. 15,490
மீதமுள்ள 6 ஏக்கர் நிலத்தில் வேதி வேளாண்மையில் கிடைத்த வருமானம் பற்றியும் இவர் கணக்கிட்டுள்ளார்.
செலவு :
உழவுச் செலவு – ரூ. 3000, டி.ஏ.பி. உரம் (7 மூடை x ரூ. 510) – ரூ. 3570, மேல் உரம் – ரூ. 300, பூச்சிக்கொல்லி – ரூ. 5000, களை எடுப்பு – ரூ. 10000, அறுவடை செலவு – ரூ. 2100, டிராக்டர் வாடகை – ரூ. 750, 3 முறை வண்டி ஏற்று கூலி, இறக்கு கூலி – ரூ. 150, சொந்த உழைப்பு ( 6 ஏக்கர்)- ரூ. 1500
மொத்தச் செலவு ரூ. 26,370
வரவு :
உளுந்து (300 கிலோ x ரூ.30) – ரூ. 9000, பருத்தி (1000 கிலோ x ரூ.20) – ரூ. 20000, மொச்சை (200 கிலோ x ரூ.20) – ரூ. 4000
மொத்த வரவு ரூ. 33000
நிகர லாபம் ரூ. 6630
இயற்கை வழி வேளாண்மையில் ஏக்கர் ஒன்றுக்குச் சராசரியாக இவர் எடுத்த வருமானம் ரூ. 7745. வேதிமுறை வேளாண்மையில் ஏக்கருக்குச் சராசரியாக ரூ. 1105. எனவே, இயற்கை முறையில் ஏறத்தாழ 7 மடங்கு லாபம் கிடைப்பது தெரிகிறது. அத்துடன் மண் வளமும் அதிகரிக்கிறது.
விவசாயி நாகஜோதியைத்
தொடர்புகொள்ள : 08110084453

Monday, November 16, 2015

இயற்கைப் புடலை...


1 ஏக்கர், 150 நாள், ரூ.1 லட்சம்
குறைவான வேலையாட்கள், எளிதான பறிப்பு ஆகிய காரணங்களால்தால்தான் சமீபகாலமாக விவசாயிகளின் பார்வை, பந்தல் காய்கறிகள் பக்கம் திரும்பியுள்ளது. வெள்ளரி, பாகல், புடலை, பீர்க்கன் போன்ற காய்கறிகள் பந்தல் முறையில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அப்படி சாகுபடி செய்யும் பலரும் இயற்கை முறையில் இக்காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட இயற்கை காய்கறி சாகுபடியாளர்களை அவ்வப்போது அடையாளம் காட்டி வருகிறது, 'பசுமை விகடன்’. அந்த வரிசையில் தன்னையும் இணைத்துக் கொள்கிறார், விருதுநகர் மாவட்டம், அச்சம்தவிழ்த்தான் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். இவர், பந்தல் அமைத்து புடலை சாகுபடி செய்து வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, அச்சம்தவிழ்த்தான். ஊருக்குள் நுழைந்தவுடனேயே பச்சைப் பசேலென படர்ந்திருக்கும் பந்தல், ராதாகிருஷ்ணனின் தோட்டத்தை அடையாளம் காட்டி விடுகிறது. கொடிகளில் தொங்கிக் கொண்டிருந்த புடலங்காய்களைப் பறித்துக் கொண்டிருந்த ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.
'நான் பத்தாம் வகுப்பு வரை படிச்சிருக்கேன். பூர்வீக விவசாயக் குடும்பம்தான். எல்லாருமே தாராளமா ரசாயனம் தூவி மகசூல் எடுத்தவங்க. அப்பா காலத்துல மிளகாய், பருத்தி, கத்திரியைத்தான் அதிகம் சாகுபடி செஞ்சாங்க. நானும் அப்பா கூட ரசாயன முறையிலதான் விவசாயம் செய்தேன். என்னதான் உரம் போட்டாலும், பூச்சிக்கொல்லி தெளிச்சாலும் நோய்கள் கட்டுப்படலை. அதுக்கேத்தாப்புல வேலையாட்களும் கிடைக்கலை. கிடைச்சாலும் கூலி அதிகமா கேட்டாங்க. போதுமான விளைச்சலும் இல்லை. என்ன செய்யலாம்னு யோசனையில இருந்தப்பத்தான்... ஒரு நண்பர், இயற்கை விவசாயத்தைப் பத்தி சொல்லி, பசுமை விகடனை எனக்கு அறிமுகப்படுத்தினார். அந்த நேரத்துல வில்லிபுத்தூருக்கு நம்மாழ்வார் ஐயா வந்திருந்தாங்க. அந்தக்கூட்டத்துல கலந்துக்கிட்டேன். அங்கதான், இயற்கை விவசாயத்துனால மண்ணுக்கு, விவசாயத்துக்குக் கிடைக்கிற நன்மைகளைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். வீட்டுக்கு வந்ததும், அப்பாகிட்ட சொன்னேன். 'இயற்கை இயற்கைனு சொல்லுவாங்க. ஆனா, மகசூல் வராது. ரசாயன விவசாயம்தான் நல்லது’னு இயற்கை விவசாயத்து மேல நம்பிக்கை இல்லாமப் பேசினார், அப்பா.
ஆனாலும், நான் விடுல. இயற்கை விவசாயத்துல ஏதாவது சாகுபடி செஞ்சு மகசூல் எடுத்துக் காட்டணும்னு முடிவு செஞ்சு... முதல் கட்டமா ரெண்டு ஏக்கர்ல டீலக்ஸ் பொன்னி விதைச்சேன். ஏக்கருக்கு 42 மூட்டை வீதம் 2 ஏக்கர்ல மொத்தம் 84 மூட்டை விளைச்சல் கிடைச்சது. அது, ரசாயனத்துக்கு இணையான மகசூல்தான். இயற்கையில விளைவிக்கிறப்போ நாத்து வளர்ச்சி, நெல் மணிகள் எல்லாத்துலயும் நல்ல வித்தியாசம் தெரிஞ்சுது. அரிசியின் சுவையும் வித்தியாசமா இருந்துச்சு. அடுத்ததா, நாட்டுக்கத்திரியை இயற்கை முறையில 2 ஏக்கர்ல சாகுபடி பண்ணினேன். வீரியமான ரசாயனப் பூச்சிக்கொல்லி அடிச்சாலே கட்டுப்படாத பூச்சிகள் கூட... இஞ்சிபூண்டுக் கரைசல், வேப்பெண்ணெய் ஸ்பிரே பண்ணுனதுல கட்டுப்பட்டுச்சு. காய்களும் திரட்சியா காய்ச்சுச்சு. மகசூலும் நல்லா இருந்துச்சு. அதுக்கப்பறம்தான் எங்க வீட்டுலயே இயற்கை விவசாயம் மேல நம்பிக்கை வந்துச்சு. அதுல இருந்து இயற்கை விவசாயம்தான் செய்றேன்' என்று முன்கதை கூறிய ராதாகிருஷ்ணன், தொடர்ந்தார்.
'கத்திரியில நல்லா மகசூல் கிடைச்சாலும், தினப்பறிப்புக்கு கூலி ஆள் கிடைக்கலை. அதனால, கத்திரியை விட்டுட்டு, வேற என்ன பயிர் சாகுபடி செய்யலாம்னு தேடுதலை ஆரம்பிச்சேன். அந்த சமயத்துல, (இரண்டு ஆண்டுகளுக்கு முன்) ஹைதராபாத்ல இருக்கிற சொந்தக்காரர் தோட்டத்துக்குப் போக வேண்டியிருந்துச்சு. அங்க, அவர் பந்தல் அமைச்சு புடலை சாகுபடி பண்ணிக்கிட்டு இருந்தார். தோட்டம் முழுக்க கொடி படர்ந்து தோரணம் கட்டுனது மாதிரி புடலங்காய் காய்ச்சுத் தொங்கிக்கிட்டிருந்ததைப் பார்க்கும்போதே, அடுத்ததா புடலைதான் போடணும்னு மனசுல நினைச்சுக்கிட்டேன். ஊருக்கு வந்ததும் அதுக்கான வேலைகளை ஆரம்பிச்சிட்டேன். முன் அனுபவம் இல்லாததால கொஞ்சம் தயக்கம் இருந்துச்சு. ஆனாலும், முதல் அறுவடையிலேயே நல்ல மகசூல். இப்போ ரெண்டு வருஷமா புடலை சாகுபடி செய்துக்கிட்டு இருக்கேன். ஒரு ஏக்கர் புடலை இப்போ அறுவடையில இருக்கு. ஒரு ஏக்கர்ல இன்னும் கொஞ்சம் நாள்ல அறுவடை பண்ணலாம்' என்ற ராமகிருஷ்ணன், மகசூல் மற்றும் வருமானம் பற்றிச் சொன்னார்.
45 பறிப்புகள்... 11,250 கிலோ!
'புடலையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய் பறிக்கிறேன். காலையில 6 மணியில இருந்து 8 மணிக்குள்ள பறிப்பு முடிஞ்சிடும். பந்தல் முறைங்கிறதுனால, காய்கள் பார்வைக்கு நல்லா தென்படும். ஒரு ஏக்கர் பறிக்க ரெண்டு ஆள் போதும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு பறிப்புனு 45 பறிப்புல இருந்து 50 பறிப்புகள் வரை பறிக்கலாம். ஒரு பறிப்புக்கு 250 கிலோவுல இருந்து 300 கிலோ வரை காய் கிடைக்கும். சிலசமயம் அதுக்கு அதிகமாவும் கிடைக்கும். சராசரியா 45 பறிப்பு, ஒரு பறிப்புக்கு 250 கிலோனு வெச்சுக்கிட்டாலே... மொத்தம் 11 ஆயிரத்து 250 கிலோ புடலங்காய் கிடைக்குது. ஒரு கிலோ 12 ரூபாய்ல இருந்து 18 ரூபாய் வரை விற்பனையாகுது.
இயற்கை முறை புடலைனு தனியால்லாம் விற்பனைக்கு அனுப்புறதில்லை. காய்கறி மார்கெட்டுக்குத்தான் அனுப்புறேன். ஆனா, மத்தவங்க கொண்டு வர்ற புடலையை விட என்னோட புடலை நீளமாவும், தரமாவும் இருக்கிறதால மத்தவங்களுக்குக் கொடுக்கிற விலையை விட கிலோவுக்கு 3 ரூபா வரை கூடுதல் விலை கொடுக்கிறாங்க, வியாபாரிகள். குறைஞ்சபட்சமா கிலோ 12 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே 11 ஆயிரத்து 250 கிலோவுக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல செலவெல்லாம் போக 1 லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சிடும்' என்ற ராமகிருஷ்ணன்,
'காய்கறிகள்ல எப்பவுமே பந்தல் காய்கறிகளுக்கு நிலையான மார்க்கெட்டும் கட்டுப்படியான விலையும் இருக்குது. அதனால, எப்பவும் பந்தல் காய்கறி விவசாயிகளைக் கைவிடாது. மரம், இரும்பு, கல்னு பல முறையில் பந்தல் அமைக்கலாம். ஆனா, கல்தூண் அமைச்சிட்டா ரொம்ப வருஷம் தாக்குப்பிடிக்கும். பந்தல் அமைக்கிறதுக்கான ஆரம்பகட்ட செலவுகளைப் பார்த்து மலைக்காம இருந்தா, தொடர்ந்து பல வருஷங்களுக்கு லாபம் பார்க்க முடியும்' என்று ஆலோசனை சொன்னார்.
சாகுபடிப்பாடம்!
ஒரு ஏக்கர் பரப்பில் பந்தல் அமைத்து புடலை சாகுபடி செய்யும் விதம் குறித்து ராதாகிருஷ்ணன் சொன்ன விஷயங்கள், பாடமாக இங்கே...
ஏக்கருக்கு 180 கல்தூண்கள்!
பந்தல் காய்கறிகளுக்குப் பட்டம் கிடையாது. அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். புடலை 150 நாள் பயிர். தேர்வு செய்த நிலத்தில், 15 அடி இடைவெளியில் 10 அடி உயரமுள்ள கல்தூண்களை ஓர் அடி ஆழத்துக்குக் குழிபறித்து ஊன்ற வேண்டும். ஏக்கருக்கு 180 கல்தூண்கள் தேவைப்படும். பிறகு, கம்பி கொண்டு பந்தல் அமைத்து... 4 டிராக்டர் மட்கிய குப்பையைக் கொட்டி மினி டிராக்டர் மூலம் உழவு செய்து ஒரு வாரம் காய விட வேண்டும். பிறகு, ஓர் உழவு செய்து சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, வரிசைக்கு வரிசை 15 அடி இடைவெளி விட்டு ஒவ்வொரு வரிசையிலும் 2 அடி இடைவெளியில் கையால் குழி பறிக்க வேண்டும். ஒரு குழிக்கு ஒரு விதை வீதம் விதைநேர்த்தி செய்த புடலை விதைகளை விதைத்து மண் கொண்டு மூடி பாசனம் செய்ய வேண்டும். ஏக்கருக்கு 300 கிராம் விதை தேவைப்படும்.
விதைத்த மறுநாள் ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து பாசனம் செய்ய வேண்டும். 5ம் நாள் முதல் 10ம் நாளுக்குள் தளிர் எட்டிப் பார்க்கும். 15ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா, 20 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற கணக்கில் கலந்து தோட்டம் முழுவதும் தெளிக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை இது போல தெளிக்க வேண்டும்.
18ம் நாள் முதல் 20ம் நாளுக்குள் கொடி படரும். கொடி படர்ந்ததும், கொடிமுனையில் கயிறு கட்டி கயிற்றின் மறு முனையைப் பந்தலில் கட்ட வேண்டும். 35ம் நாளுக்குள் கொடி வளர்ந்து பந்தலை அடைந்து விடும்.
40ம் நாளுக்கு மேல் பூக்கத்தொடங்கும். 50ம் நாளுக்கு மேல் காய்கள் தென்படும். 60ம் நாளில் இருந்து காய் பறிக்கத் தொடங்கலாம். 75ம் நாளுக்கு மேல் அதிகளவில் காய்கள் காய்க்கும். 150ம் நாள் வரை காய் பறிக்கலாம்.
20, 40, 60 மற்றும் 80ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை களை எடுக்கும்போதும்...
20 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 20 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 20 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைக் கலந்த கலவையில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து, ஒவ்வொரு செடியின் தூரிலும் வைக்க வேண்டும்.
ஒரே சந்தையை நம்பக்கூடாது!
'ராஜபாளையம், வில்லிபுத்தூர், சிவகாசினு மூணு ஊரு சந்தைகளுக்கும் நான் காய் அனுப்புறேன். எப்பவுமே ஒரே சந்தையை மட்டும் நம்பி இருக்கக்கூடாது. ஒரே சந்தையில மொத்தக் காயையும் விற்கும்போது விலையைக் குறைச்சிடுவாங்க. 'இதுதான் விலை... இல்லை வேண்டாம்னா எடுத்துக்கிட்டுப் போங்க’னு ஈஸியா சொல்லிடுவாங்க. காய்களைப் பறிச்சு மூட்டைக் கட்டி, அவ்வளவு தூரம் கொண்டு போய் விலைக்குப் போடும்போது, வியாபாரி வேண்டாம்னு சொன்னா அவ்வளவு கஷ்டமா இருக்கும். அதனால எப்பவுமே, குறைஞ்சது இரண்டு சந்தைகளையாவது கையில வச்சிருக்கணும். அப்பத்தான் ஒரு சந்தையில விலை இல்லாட்டாலும், இன்னொரு சந்தையில விலை கிடைக்கும். விலையில ஏற்றம் இறக்கம் இருந்தாலும் நஷ்டம் வராது' என்கிறார், ராதாகிருஷ்ணன்.
முயல்கள், எலிகள் தொல்லைக்கு கூமுட்டைக் கரைசல்!
'இந்தப் பகுதிகளில் முயல் தொல்லை அதிகம். புடலை விதை ஊன்றிய அன்றே குழியைத் தோண்டி விதையை எடுத்துவிடும். தப்பிச்சு வர்ற கொடிகளை தண்டுப்பகுதியில் கடிச்சி விட்டுடும். ரெண்டு அழுகின முட்டையை (கூமுட்டை) உடைச்சு 10 லிட்டர் தண்ணீரில் கலக்கி, வாரம் ஒரு முறை கொடியைச் சுற்றி தெளிச்சு விட்டா போதும். தோட்டத்துப் பக்கம் முயல் எட்டி கூடப் பார்க்காது. எலி, பெருச்சாளி தொல்லைக்கும் இதைச் செய்யலாம்' என்கிறார், ராதாகிருஷ்ணன்.
சிவப்பு வண்டுத் தாக்குதலுக்கு இஞ்சிபூண்டுக் கரைசல்!
கொடி படர ஆரம்பித்தவுடன் சிவப்பு வண்டுகள் தாக்கலாம். இலை அல்லது தண்டுகளில் ஒரு சிவப்பு வண்டு தென்பட்டாலும், உடனே பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். 250 கிராம் இஞ்சி, 250 கிராம் பூண்டு ஆகியவற்றை அரைத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ள வேண்டும். இக்கலவையிலிருந்து 100 மில்லி எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
புடலங்காயின் பயன்கள்!
புடலங்காய் நம் உடலிலுள்ள நச்சுகளை அழித்து வெளியேற்றுகிறது. தண்ணீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதோடு, உடலிலுள்ள தேவையற்ற உப்பு நீரை, வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றி விடும் தன்மை கொண்டிருக்கிறது. புடலை இலைச்சாறுடன், கொத்தமல்லித்தழை சேர்த்து கொதிக்க வைத்த தன்ணீரை தினமும் 3 வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுக்குள் வரும். புடலங்காயில் வைட்டமின் ஏ, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் சுண்ணாம்பு ஆகிய சத்துக்கள் இருப்பதால் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உகந்தது. பிஞ்சு அல்லது நடுத்தர காயைத்தான் சாப்பிட வேண்டும்.
பூஞ்சண நோயைக் கட்டுப்படுத்தும் விதைநேர்த்தி!
100 மில்லி பஞ்சகவ்யாவை, 300 மில்லி தண்ணீரில் கலந்து, அதில் புடலை விதைகளை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் விதைகளை எடுத்து, அவற்றின் மீது, 20 கிராம் அசோஸ்பைரில்லம், 20 கிராம் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து தூவி அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். இவ்வாறு விதை நேர்த்தி செய்தால், பூஞ்சண நோய் வராது.
தொடர்புக்கு,
ராதாகிருஷ்ணன்,
செல்போன்: 9486588859.

கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம் : Natural medicine for cow


1. மடி வீக்க நோய் (Mastitis) :
கறவை மாடுகளில் மடி வீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமி தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. மாட்டின் மடியானது வீக்கமாகவும், கடினத்தன்மையுடனும், வெப்பம் அதிகரித்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலானது திரிந்து வெள்ளையாகவோ மஞ்சள் அல்லது இரத்தம் கலந்தோ காணப்படும். மடியினை நன்கு கழுவி, சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் -
சோற்றுக்கற்றாழை-200 கிராம் (ஒரு மடல்), மஞ்சள் பொடி-50 கிராம், சுண்ணாம்பு-5 கிராம் ( ஒரு புளியங்கொட்டை அளவு)
சிகிச்சை முறை : (வெளிப்பூச்சு)
மேற்கண்ட பொருட்கள் மூன்றையும் ஆட்டுக்கல் உரலில் இட்டு நன்றாக கெட்டியாக அரைத்து பின் ஒரு கை அளவு எடுத்து நீர் விட்டு கரைத்து நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாக தடவ வேண்டும். நாள் ஒன்றுக்கு 10 முறை என்ற அளவில் மடி வீக்கம் குறையும் வரை பூச வேண்டும்.
2. வயிறு உப்புசம் (Bloat) :
கால்நடைகளில் உப்புசம் அல்லது நுரையோடு கூடிய வயிறு உப்புசம் தீவன மாறுபாடுகளினால் ஏற்படக் கூடியது. இது மிக எளிதில் செரிக்கக் கூடிய தானிய வகை உணவு மற்றும் ஈரமான பசுந்தீவனங்கள் அதிகமாக உண்பதால் ஏற்படுகிறது.
ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருத்துவப் பொருட்கள் :-
வெற்றிலை-10 எண்ணிக்கை,
பிரண்டை-10 கொழுந்து,
வெங்காயம் -15 பல்,
இஞ்சி -100 கிராம்,
பூண்டு -15 பல்,
மிளகு-10 எண்ணிக்கை,
சின்ன சீரகம்-25 கிராம்,
மஞ்சள்-10 கிராம்.
சிகிச்சை முறை : (வாய் வழியாக)
சின்ன சீரகம் மற்றும் மிளகினை இடித்து பின்பு மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து இக்கலவையை 200 கிராம் கருப்பட்டியுடன் (பனை வெல்லம்) கலந்த பின் சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கல் உப்பு (தேவைப்படும் உப்பு – 100 கிராம்) தொட்டு நாக்கின் மேல் தடவி ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும்.
3. கோமாரி வாய்ப்புண் (Foot & Mouth disease) :
கோமாரி அல்லது கால் – வாய் காணை ஒரு நச்சுயிரி நோயாகும். இது மாடு, ஆடு மற்றும் பன்றிகளைத் தாக்குகிறது. வாயிலும் நாக்கிலும் கொப்புளங்கள் ஏற்படும். எச்சிலானது கம்பி போன்று வழிந்து கொண்டிருக்கும். காலின் குளம்புப் பகுதியில் புண்கள் தோன்றி கால் முழுவதும் வீக்கம் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளின் மடியில் கன்றுகளை பால் ஊட்ட விடுதல் கூடாது. இந்நோய் வராது தடுக்க முறையாக கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடுதல் மிக அவசியம்.
ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் :-
தேங்காய் துருவல் -1 தேங்காய் ( பால் கட்டியது),
சீரகம் -50 கிராம்,
வெந்தயம் -30 கிராம்,
மஞ்சள் பொடி -10 கிராம்,
கருப்பட்டி (பனை வெல்லம்) -20 கிராம்.
சிகிச்சை முறை – மாடு ஒன்றுக்கு உள் மருந்து : (வாய் வழியாக)
சீரகம், வெந்தயம், மஞ்சள், கருப்பட்டி அரைத்து தேங்காய் துருவலுடன் கலந்து நோய்கண்ட மாடு ஒன்றுக்கு தினமும் இருவேளை குறைந்த பட்சம் 3 நாட்கள் கொடுக்க வேண்டும். ஐந்து நாட்கள் கொடுக்க கால்நடைகள் நன்றாக குணமடைகிறது. மாட்டின் தலையைத் தூக்கிப்பிடித்து இரு கடைவாய் பகுதியிலும் மெதுவாக உள்ளே செலுத்த வேண்டும்.
4. கோமார் கால் புண் (Foot lesions) :
தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : குப்பைமேனி -100 கிராம்,
பூண்டு-10 பல்,
மஞ்சள்-100 கிராம்,
இலுப்பை எண்ணெய் (அ) நல்லெண்ணெய்-250 கிராம்
சிகிச்சை முறை : (வெளி பூச்சு மருந்து)
முதல் மூன்று பொருட்களை இடித்து இலுப்பை எண்ணெயுடன் கலந்து காய்ச்சி பாதிக்கப்பட்ட கால்நடையின் கால்களை உப்பு, மஞ்சள் கலந்த நீரில் கழுவி ஈரத்தை சுத்தமான காய்ந்த துணியால் ஒற்றி எடுத்து பின் மேற்கண்ட மருந்தை இட வேண்டும்.
5. விட(ஷ)க்கடி :
விடத்தன்மையுள்ள உயிரினங்களான தேள், குளவி, வண்டு, பூரான், அரணை மற்றும் சிறு பாம்புக் கடியினால் தோலில் தடிப்பு, உடல் வீக்கம், வயிறு உப்புசம், வாயில் நீர் வடிதல், முச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஆடுகளில் தென்படும்.
தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் :
உப்பு -15 கிராம்,
தும்பை இலை -15
எண்ணிக்கை, சிறியா நங்கை (இலை),
(நில வேம்பு)-15 எண்ணிக்கை,
மிளகு-10 எண்ணிக்கை,
சீரகம் -15 கிராம்,
வெங்காயம்-10 பல்,
வெற்றிலை -5 எண்ணிக்கை,
வாழைப்பட்டை சாறு-50 மி.லி.
சிகிச்சை முறை :
சின்ன சீரகம், மிளகினை இடித்து பின்பு இதனுடன் மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து இக்கலவையை சிறு உருண்டைகளாக 100 கிராம் கருப்பட்டி (பனை வெல்லம்) கலந்து உப்பில் தொட்டு நாக்கின் மேல் தேய்த்து ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள் செலுத்த வேண்டும்
ஆதாரம் : கால்நடை பயிற்சி ஆராய்ச்சி மையம் திண்டுக்கல்.

தோட்டத்துலயே கேஸ் உற்பத்தித் தொழிற்சாலை

''நாலு மாடு இருந்தா... நாமதான் நெய்வேலி!''
புதிய நுட்பம்

வருஷத்துக்கு ஆறு சிலிண்டர் தந்தா என்ன... அறுபத்தி நாலு சிலிண்டர் தந்தா என்ன... இதைப் பத்தியெல்லாம் எங்களுக்குக் கவலையே இல்லை. ஏன்னா... நாங்க தோட்டத்துலயே கேஸ் உற்பத்தித் தொழிற்சாலை வெச்சுருக்கோம்ல'' என்று தெம்பாகச் சொல்கிறார்கள், கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை அடுத்துள்ள, சாளைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல்-கவிதா தம்பதி!
இவர்கள் அமைத்திருப்பது... சாண எரிவாயுக் கலன். இது, வழக்கம்போல... இரும்புக் கலன், சிமென்ட் தொட்டி என்று இல்லாமல், எளிதாகக் கையாளக் கூடிய வகையில் 'பாலிதீன் ஷீட்’டில் தயாரான புதுவகைக் கலனாக இருப்பது... கூடுதல் சிறப்பு!
''படிச்சு முடிச்சதும் விவசாயத்துக்கு வந்துட்டேன். அதுக்கு தோதா தோட்டத்துலயே வீட்டைக் கட்டி குடிவந்துட்டேன். ஆரம்பத்துல விறகு அடுப்புதான். அப்பறம், புகையில்லாம சமைக்கறதுக்காக கேஸ் சிலிண்டருக்கு மாறினோம். ஆனா, கிராமத்துல சிலிண்டர் கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. மாசத்துக்கு ஒரு தடவைதான் சிலிண்டர் வண்டி வரும். அன்னிக்கு காலி சிலிண்டரோட மெயின் ரோட்டுல காத்துக் கிடக்கணும். அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வரல. அதனாலதான், மாட்டுச் சாணத்துல இருந்து கேஸ் உற்பத்தி பண்ணலாம்னு முடிவுக்கு வந்தேன்.
இதைப் பத்தி விசாரிச்சப்ப, 'சாண எரிவாயுக் கலன், இரும்பு டிரம்லதான் அமைக்கணும். பெரியக் கிடங்கு வெட்டி, சிமெண்ட் பூசி பதிக்கணும். அதுக்கு செலவு அதிகமாகும். துருப்பிடிச்சு போச்சுனா பிரச்னை வரும்’னு ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து சொன்னாங்க. 'என்ன செய்யலாம்?'னு யோசிச்சுட்டு இருந்த சமயத்துலதான் 'பாலிதீன் பயோ கேஸ் ஹோல்டர்’னு ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டு, அதை வாங்கிப் போட்டுட்டோம்'' என்ற தங்கவேலைத் தொடர்ந்த கவிதா...
''இதைப் போட்டு ரெண்டு வருஷம் முடிஞ்சுடுச்சு. இதுல சாணம் மட்டுமில்லாம, காய்கறிக்கழிவு, தீவனக்கழிவு எல்லாத்தையும் பயன்படுத்த முடியும். ஒரு கிலோ சாணத்துக்கு ஒரு கிலோ தண்ணிங்கிற கணக்குல கரைச்சு ஊத்தணும். மத்தக் கழிவுகளா இருந்தா... நல்லா நசுக்கி, தண்ணில கரைச்சு ஊத்தணும். தினமும் 20-25 கிலோ அளவுக்கு சாணத்தை ஊத்துறோம். நாள் முழுக்க தட்டுப்பாடு இல்லாம கேஸ் கிடைச்சுடுது. கேஸ் உற்பத்தி முடிஞ்சு வெளியாகுற கழிவை (ஸ்லர்ரி), தென்னை மரங்களுக்கு உரமாக்கிடறோம்'' என்று சொன்னார்.
மனைவியை ஆமோதித்த தங்கவேல், எரிவாயுக் கலனின் தொழில்நுட்ப விஷயங்கள் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
''இது, பல கொள்ளளவுகள்ல கிடைக்குது. நமக்குத் தேவையான அளவுல வாங்கிக்கலாம். நாங்க, 1 கன மீட்டர் கொள்ளளவு உள்ள ஹோல்டர் போட்டுருக்கோம். 4 அடி நீள, அகலத்தில், 3 அடி ஆழத்தில் குழி எடுத்து, அதுக்குள்ள இந்த ஹோல்டர வெச்சுடலாம். சிமெண்ட் பூச்செல்லாம் தேவையில்லை. வாயு அதிகமா உற்பத்தியாகும்போது, ஹோல்டர் மேலே எழும்பி வராம இருக்கறதுக்காக சுமார் 10 கிலோ எடையுள்ள ஒரு மூட்டையை ஹோல்டர் மேல வைக்கணும்.
நாலு மணி நேரம் தொடர்ந்து எரியுற அளவுக்கான கேஸ், இந்த ஒரு கனமீட்டர் ஹோல்டர்ல இருந்து கிடைக்கும். இது பெரிய பலூன் மாதிரி 'திக்’கான பாலிதீன்ல தயார் பண்ணியிருக்கறதால... வெயில், மழையால பாதிப்பு இல்லாம பத்து வருஷம் வரைக்கும் உழைக்கும்னு சொல்றாங்க. முள், ஆணி பட்டாலும் ஓட்டையாகாது. அப்படியும் ஓட்டை விழுந்தா... பஞ்சர் பாக்கறதுக்கும் வசதி இருக்கு. சாணம் கரைச்சு ஊத்துறதுக்கு ஒரு பெரியத் துளை, கழிவுகள் வெளியேறுறதுக்கு ஒரு பெரியத் துளை, கேஸ் வர்றதுக்கு சின்னத் துளை இது மூணும் இதுல இருக்கு.
முதல்ல அமைக்கறப்போ... 300 கிலோ சாணத்தை, 300 கிலோ தண்ணில கரைச்சு ஊத்தணும். காய்ஞ்ச சாணமாக இருந்தா... கேஸ் வெளிய வர ஒரு மாசம் ஆகும். புது சாணமா இருந்தா... 15 நாள்ல வந்துடும். கேஸ் வர ஆரம்பிச்ச பிறகு, தினமும் 20 கிலோ... இல்லனா... 25 கிலோ சாணத்தை தண்ணில கலந்து ஊத்தணும். இதுக்கு, வீட்டுல ரெண்டு மாடு இருந்தாலே போதும். சாண எரிவாயு தண்ணி அளவு சரியா இருக்கணும். கூடவோ, குறைச்சலாவோ இருந்தா... வாயு உற்பத்தி அதுக்கு தகுந்தபடிதான் இருக்கும்'' என்று சொன்னார்.
நிறைவாகப் பேசிய தம்பதி, ''இப்போல்லாம், 'சிலிண்டர் விலை ஏறிப்போச்சு’னு யாராவது எங்ககிட்ட புலம்பினா, 'கையில வெண்ணெய வெச்சிட்டு நெய்க்கு ஏன் அலையுறீங்க?னுதான் திருப்பிக் கேக்குறோம். இதுக்கு 10 ஆயிரம் ரூபாய்தான் மொத்தச் செலவு ஆச்சு. நாங்க ரெண்டு வருஷத்துலயே 5 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கேஸ் செலவுல அதை ஈடுகட்டிட்டோம். அதில்லாம இதுல விபத்து நடக்கவும் வாய்ப்பில்லை. இதைப் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டா... கேஸ் பத்தின கவலையே இல்லாம இருக்கலாம்'' என்று விடை கொடுத்தனர்.
தொடர்புக்கு :
கே. தங்கவேல்,
செல்போன்: 94880-42428.
----------------------------------------------------------------------------
சுற்றுச்சூழலுக்கு பங்கம் இல்லாத மின்சாரத்தின் மூலம் சார்ஜ் செய்யப்படும் பேட்டரி பைக்கினை கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறார். ''30 ஆயிரம் ரூபாய் விலையில் வாங்கிய பின்பு 600 லிட்டர் பெட்ரோலை மிச்சம் செய்துள்ளேன்'' எனச் சொல்லும் தங்கவேல், ''மாடுகளை அதிகரித்து, அதன் மூலம் பயோ கேஸையும் அதிகரித்து, என் குடும்பத்துக்குத் தேவையான சமையல் எரிவாயுவையும் மின்சார உற்பத்தியையும் செய்துகொள்ளப் போகிறேன். இனி வரும்காலங்களில் கண்டிப்பாக விவசாயிகள் அனைவரும் இதை நோக்கி வந்தே ஆகவேண்டும். அரசாங்கம் கொடுக்கும் மின்சாரம், சிலிண்டர் எதுவும் நமக்குத் தேவையில்லை. நாலு மாடு இருந்தால், நாமேதான் நெய்வேலி, நாமதான் கூடங்குளம். அதற்கான நேரம் நெருங்கி விட்டது''என்கிறார் அழுத்தமாக.

Friday, November 13, 2015

ஆசிரியருக்குக் கைகொடுத்த கீரை:



ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வருமானம்
எம். நாகராஜன் முழு நேரமும் நிலத்துடன் சேர்ந்து உழைத்து, மண்ணை நேசித்தால் உரிய பலன் கிடைக்கும் என்கிறார் கீரை சாகுபடியில் சாதிக்கும் உடுமலை முன்னாள் ஆசிரியர் விவசாயி த. பிரபாகரன் (29).
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலையில் உள்ள கிளுவன்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் பிரபாகரனும், அவரது மனைவியும் இன்றைக்கு முழு நேர விவசாயிகள். தங்களுக்கு இருக்கும் சிறிய நிலத்துடன், கூடுதல் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கீரை விளைவித்து வருகின்றனர்.
விவசாயம் நம்பகமானது
விவசாயி த.பிரபாகரன் கூறுகையில், "நான் எம்.எஸ்.சி., பி.எட். முடித்துவிட்டு மாதம் ரூ. 4 ஆயிரம் சம்பளத்தில் தனியார் பள்ளியில் வேலை பார்த்தேன். சம்பளம் முழுவதும் போக்குவரத்து செலவுக்கே போய்விட்டது. குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை.
எங்களுக்குச் சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. விவரம் தெரிந்த நாள் முதல் பெற்றோருடன் விவசாயத்துக்குப் பாடுபட்ட நிலம் என்பதால், அந்த மண்ணை நன்கு அறிந்திருந்தேன்.
எங்களது நிலத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, கீரை நல்ல பலன் கொடுக்கும் என்று தெரியவந்தது. எனது மனைவி சிவகாமி (27) எம்.ஏ., பி.எட்., படித்திருக்கிறார். அவரும் ஆசிரியப் பணியை விட்டுவிட்டு விவசாயத்தில் அக்கறை காட்டினார். இருவரும் முழு நேரமாகக் கீரை சாகுபடியில் ஈடுபட்டுவருகிறோம்" என்கிறார்.
நேரடி விற்பனை:
---------------------------------
ஆழ்குழாய் பாசனத்தை அதிகமும் நம்பியுள்ள இவர்கள் சிறு கீரை, மணத் தக்காளி, வெந்தயக் கீரை, பாலக் கீரை, அரைக் கீரை எனப் பல வகை கீரைகளைச் சாகுபடி செய்துவருகின்றனர்.
உடுமலையில் உள்ள உழவர் சந்தைக்குத் தினமும் நேரடியாகக் கொண்டு சென்று விற்பதால், நல்ல விலை கிடைக்கிறது.
இவர்களிடம் மொத்த விலைக்கு வாங்கும் வியாபாரிகள் மூலம் திருப்பூர், கோவை, திண்டுக்கல் மாவட்டங்கள் உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்குக் கீரை விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படுகிறது.
ரூ. 2 லட்சம் வருடத்தில் 6 மாதங்களுக்குப் பலன் தருகிற கீரை ரகங்களில் 6 முறை அறுவடை நடக்கும். ஒரு முறைக்கு 12,000 கட்டு கீரை கிடைக்கும். 6 முறைக்கு 72,000 கட்டுகளுக்குத் தலா ரூ.5 கிடைக்கும்.
அதனால் ஆண்டு வருவாய் சுமார் ரூ. 3 லட்சம் கிடைக்கும். இதில் ஆள்கூலி, அடியுரம், பராமரிப்புச் செலவுகளுக்காகச் சுமார் ரூ. 1 லட்சம்வரை செலவு பிடிக்கும். எஞ்சியது லாபம்தான் என்கிறார் பிரபாகரன்.
அடுத்ததாகக் கீரையுடன் பசுங்குடில் விவசாயம் மூலம் மலைக் காய்கறிகளைச் சாகுபடி செய்யத் திட்டமிட்டிருக்கிறார் பிரபாகரன்.
இவரைப் போலவே பலரும் இப்பகுதியில் கீரை சாகுபடி செய்துவருவதால், ‘கிளுவன்காட்டூர் கீரை' சுற்றுவட்டாரத்தில் பிரபலமாகிவருகிறது.
விவசாயி பிரபாகரனைத் தொடர்புகொள்ள: 9965351536
தொகுப்பு: வானக வானம்பாடிகள் குழு

இயற்கை முறையில் தக்காளியை தாக்கும் பூச்சி கட்டுப்பாடு...!!!


இயற்கை முறையில் தக்காளி சாகுபடி செய்வது எப்படி?
சோற்றுக் கற்றாழை, துளசி மற்றும் ஆடு தின்ன பாளை செடிகளின் சாற்றை தயார் செய்து, தக்காளி செடி மீது தெளித்தால் எல்லாவிதமான பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதோடு, பூ உதிர்தலையும் குறைக்கலாம்.
1. 20மிலி காகித பூ இலைச் சாற்றில் ஒரு லிட்டர் நீர் கலந்து தக்காளி விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து விதைத்தால் நாற்றாங்காலில் நாற்று அழுகல் நோய் வராது.
2. 25-30 நாட்கள் ஆன நாற்றுக்களை நடவுக்கு பயன்படுத்தவேண்டும்.
3. பூ உதிர்தலை குறைக்க, வேப்பம் எண்ணெயை தெளிக்கலாம்.
4. பூ உதிர்தலை குறைக்க சூளைச் சாம்பல் தோட்டத்தைச்சுற்றி நட்டால் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.
5. செண்டுமல்லி செடியை தக்காளி தோட்டதததைச் சுற்றி நட்டால் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.
6. காய் துளைப்பானை தடுக்க, பூண்டு அல்லது வெங்காய செடியை வரப்பு பயிராக நடவு செய்தல் வேண்டும்.
7. பென்சோயின் கொண்டு பூக்கும் போது காலை, மாலை வேளைகளில் புகை மூட்டினால் காய் துளைப்பான் மற்றும் அசுவினி தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
8. வேப்பம் புண்ணாக்கு உடன் ஆட்டுப் புழுக்கையை கலந்து வயலில் இட்டால் இலைப்பேன் தாக்கம் கட்டுப்படும்.
9. காலை வேளையில் சாம்பலைத் தக்காளிச் செடிக்குத் தூவினால் இலைப்பேன் மற்றும் அசுவினி தாக்குதல் கட்டுப்படும்.
10. அனைத்து வித பூச்சிகளையும் கட்டுப்படுத்த 11/2 கிலோ சாம்பலை சாணியுடன் கலந்து தெளித்தல் வேண்டும்.
11. சர்வோதய சோப் கரைசலை இலைகளின் மீது தெளித்தால், மாவுப் பூச்சியின் முட்டை மீது படிந்து இறந்து விடும்.
இயற்கை முறையில் தக்காளி சாகுபடி செய்வது எப்படி?
மண் மற்றும் தட்பவெப்பநிலை : தக்காளியை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் மிகவம் ஏற்றது. மண்ணின் கார தன்மை 6.0-7.0 என்ற அளவில் இருக்கவேண்டும். வெப்பநிலை 210 முதல் 240 செ.கி வரை இருப்பது இதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
விதைக்கும் காலம் : ஜீன் - ஜீலை, நவம்பர் - டிசம்பர், பிப்ரவரி - மார்ச்.
நடும் பருவம் : அக்டோபர் - நவம்பர், பிப்ரவரி - மார்ச், மே - ஜீன்.
விதையும் விதைப்பும் :
விதை அளவு : எக்டருக்கு 350-400 கிராம் விதைகள்.
இரகங்கள் : கோ.1, கோ.2, மருதம் (கோ 3), பிகேஎம் 1, பூசாரூபி, பையூர் 1, சிஒஎல்சிஆர்எச் 3, அர்கா அப்ஜித், அர்கா அஃஹா, அர்கா அனான்யா, அர்கா அலோக், அர்கா சிரஸ்டா, அர்கா வர்தன், அர்கா விசால், அர்கா விகாஸ், அர்கா செவ்ரோப், அர்கா மெகாலி மற்றும் அர்கா அஹ்தி.
தக்காளி சாகுபடி பொதுவாக கோடைப் பருவத்திலும் இல்லாமல், மழைக்காலத்திலும் இல்லாமல் இதுபோல் இடைபட்ட காலத்தில் செய்வது அதிக லாபம் தரும். மேலும் பூச்சிகளின் தாக்குதல், நோய் பாதிப்பில் இருந்து இப்பருவத்தில் எளிதாக காக்க முடியும்
நாற்றங்கால் முறை :
மண்ணைத் தோண்டி அடித்தாள்களை அகற்ற வேண்டும்.
10 நாள்கள் சிதைவு ஏற்பட நிலத்தை விட்டு விட வேண்டும்.
வடிகால் நன்றாக அமைவதற்கு உயரமான பாத்திகள் அமைக்கவும்.
தொழு உரம் அல்லது கம்போஸ்ட், செம்மண், மணல் ஆகியவற்றை சம அளவில் நன்றாக கலந்து நிலத்தில் இட வேண்டும்.
தொழு உரத்துடன் அசோஸ் பைரில்லத்தை 1 சதுர மீட்டருக்கு 20 கிராம் என்ற அளவில் இட வேண்டும்.
பாஸ்போ பாக்டீரியாவையும் 1 சதுர மீட்டருக்கு 20 கிராம் என்ற அளவில் இட வேண்டும்.
நாற்று அழுகல் நோயைக் கட்டுப்படுத்த கோதுமைத் தவிடு, மக்கிய மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து இட வேண்டும்.
விதை அளவு, நேர்த்தி :
நாட்டு ரக விதைகள் ஒரு ஹெக்டேருக்கு 400 கிராமும், வீரிய ஓட்டு ரக விதையாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 150 கிராமும் இட வேண்டும்.
விதை உற்பத்தி நிறுவனங்களால் ரசாயனப் பொருள்களை கொண்டு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை தவிர்க்க வேண்டும்.
விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன், 1 கிலோ விதையை ட்ரைக்கோடெர்மா விரிடியுடன் கலந்து நேர்த்தி செய்யலாம்.
விதைப்பதற்கு முன் 400 கிராம் விதையுடன் 40 கிராம் அசோஸ் பைரில்லத்தை கலக்க வேண்டும்.
வீரிய ஒட்டு ரக விதைகளுக்கு 20 கிராமுக்கு 150 கிராம் என்ற அளவில் கலக்க வேண்டும்.
நாற்றங்கால் பாத்தியில் 10 செ.மீட்டர் இடைவெளி விட்டு வரிசையாக விதைக்க வேண்டும்.
நடவு வயல் :
சரியான ஈரப்பதத்தில் வயலை 3 அல்லது 4 முறை உழவு செய்யவேண்டும். 10 நாள் சிதைவு ஏற்படுவதற்காக விட வேண்டும்.
பசுந்தாழ் உரமாக சணப்பை விதைத்து 35 நாட்களுக்குப் பின் மடக்கி உழ வேண்டும்.
கடைசி உழவுக்கு முன் ஹெக்டேருக்கு 25 டன் வீதம் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இடலாம்.
நடவுக்கு முன் 20 கிலோ தொழு உரத்துடன் அசோஸ் பைரில்லம் 2 கிலோ (1 ஹெக்டேருக்கு) பாஸ்போ பாக்டீரியா 2 கிலோ ஆகியவற்றை கலந்து இட வேண்டும்.
60 செ.மீட்டர் இடைவெளியில் பார்கள், உழவு சால்கள் அமைக்க வேண்டும்.
ஒரு ஹெக்டேருக்கு 12 எண்ணிக்கை என்ற அளவில் இனக் கவர்ச்சி பெரோமோன்களை அமைக்க வேண்டும்.
பேசில்லஸ், துரின்ஷியன்சிஸ் 2 கிலோ என்ற அளவில் தெளிக்கவும்.
தாக்கப்பட்ட பழங்களை அப்புறப்படுத்தி அழிக்கவேண்டும்.
வேப்பெண்ணெய் 3 சதவீதம், வேப்ப விதை பருப்புச் சாறு 5 சதவீதம் என்ற அளவில் தெளித்து பூச்சி பரவுதலைத் தடுக்க வேண்டும்.
புள்ளியிட்ட அழுகல் வைரஸ் தடுக்க 10 சதவீத சோள இலைச்சாறு, அல்லது ப்ரோசோபிஸ் அல்லது தேங்காய்ச் சாறு 15 நாள் இடைவெளியில் தெளிப்பதன் மூலம் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியும்.
அறுவடை :
முக்கால் பருவ முதிர்ச்சியில் பழங்களை அறுவடை செய்யவும். அதிக அளவு பழுக்க விடக்கூடாது.
இலை மற்றும் செடியின் அனைத்து பாகங்களையும் எடுத்து அவற்றை கம்போஸ்ட் செய்யவேண்டும்.
பொதுவாக 1 ஹெக்டேருக்கு 15 டன் வரை மகசூல் பெற முடியும். மேற்கண்ட இயற்கை வேளாண் முறைகளின்படி தக்காளி சாகுபடி செய்தால் ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன்கள் வரை நிச்சயம் மகசூல் செய்ய முடியும்.